25 வயதில் அக்கவுண்ட்ல 500 ரூபாய் இல்லை.. நான்கே ஆண்டுகளில் இளம் இந்திய சாதனையாளரான விஜய் தேவரகொண்டா!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றதன் மூலம் இளம் இந்திய சாதனையாளராக உருவெடுத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜூன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்சிவாலா’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றவர்.

இவர் நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து நேரடி தமிழ்ப்படமான ‘நோட்டா’-வில் நடித்தார். ஆனால் அந்த படம் வெற்றி பெறாததற்கு தானே காரணம் என கூறினார்.

இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்திய சாதனை இளைஞர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அதாவது, 30 வயதுக்குள் பணக்காரர்கள் ஆன 30 இந்திய பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே நடிகர் விஜய் தேவரகொண்டா தான். கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் ஆகியோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘25 வயதில் ஆந்திரா வங்கில 500 ரூபாய் இல்லனா Account Close ஆகிடும். அதனால் 30 வயதுக்குள் செட்டில் ஆகிடுனு அப்பா கூறுவார்.

பெற்றோர் ஆரோக்கியமா இருக்கும்போது இதெல்லாம் பண்ணாதான், பின்னாடி சந்தோசமாக இருக்க முடியும்னு சொன்னார். 4 வருடம் கழித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் நான் Under 30-ல இருக்கேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்