இது ஆரம்பம் தான்.. சிம்பு கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் சிம்பு தனது கட் அவுட்டுக்கு அண்டாவில் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் தற்போது கட் அவுட்டுக்கு பால் ஊற்ற ஆரம்பித்துள்ளனர்.

பொங்கல் அன்று நடிகர் சிம்பு ட்விட்டர் பக்கத்தில், தனது ரசிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சில அறிவுரைகளை வழங்கினார். தனது படத்திற்கு பெரிய பெரிய கட் அவுட் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை என வாங்கிக் கொடுத்து முடிந்ததை செய்யுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், சிம்புவின் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனம் செய்தனர். ரசிகர்கள் இல்லாத சிம்புவுக்கு இந்த விளம்பரம் தேவைதானா என கிண்டல் செய்தனர். இதனால் கோபமடைந்த சிம்பு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், இதுவரை இல்லாத அளவுக்கு அண்டாவில் தனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யுமாறும், இது தனது அன்பு கட்டளை என்றும் தெரிவித்தார். எனக்கு இருப்பது ஒன்றிரண்டு ரசிகர்கள் தானே, அதனால் நீங்கள் இதை செய்வதால் பெரிய தப்பு ஒன்றும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

இதனால் பால் முகவர்களிடம் இருந்து பால் திருடப்பட வாய்ப்புள்ளது என்று நினைத்த தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர், காவல்நிலையத்தில் சிம்புவின் இந்த கோரிக்கைக்கு எதிராக புகார் அளித்தனர்.

இந்நிலையில், திருச்சியில் ரசிகர் ஒருவர் சிம்புவின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இது ஆரம்பம் தான் என்றும், பிப்ரவரி 1ஆம் திகதி தான் சிம்பு ரசிகர் ஆட்டத்தை காணப் போகிறீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களின் இந்த செயலை, சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் சிம்பு தடுப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers