கணவர் ரஜினியின் பெயரை பார்த்தவுடன் ஆர்ப்பரித்த மனைவி லதா ரஜினிகாந்த்: வெளியான வீடியோ

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

இன்று ரஜினியின் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

ரஜினியின் தீவிர ரசிகர்கள் திருமணத்தை நடத்தி வைத்தும், பரிசுகள் வழங்கியும் பேட்ட திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியின் குடும்பத்தினரும் திரையரங்குக்கு சென்று ரசிகர்களோடு பேட்ட திரைப்படத்தை பார்த்துள்ளனர்.

மனைவி லதா, மருமகன் தனுஷ், நடிகை த்ரிஷா மற்றும் உறவினர்கள் திரையரங்கில் படம் பார்த்து கொண்டாடியுள்ளனர். அதுவும், ரஜினியின் பெயரை திரையில் பார்த்தவுடன் மனைவி லதா ரஜினிகாந்த் எழுந்து நின்று சந்தோஷத்தில் கை தட்டி ஆரவாரம் செய்துள்ளார்.

மேலும், படம் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் கணவரின் தோற்றங்கள் உணர்ச்சிமிகுந்தவையாக இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்