கனடா சாலைக்கு தமிழனின் பெயர்: உலகளவில் இசைத்துறையில் கொடிநாட்டிய ரஹ்மான் பற்றிய தகவல்கள்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஏ.ஆர் ரகுமானின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளம் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

இன்றைய பிறந்தநாளில் அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இயக்குநர் மணிரத்தினத்தில் ரோஜா படத்தில் தொடங்கி ஹாலிவுட் வரை இவரது இசை பரவியுள்ளது.

ஒரே ஆண்டில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று ஒரே ஆசியாவைச் சேர்ந்தவராக ரஹ்மான் உள்ளார்.

இதுவரையில் ரஹ்மான், 4 தேசிய விருதுகள், 15 ஃபிலிம் ஃபேர் விருதுகள், 14 தென் ஃபிலிம் ஃபேர் விருதுகள் எனப் பெற்றுள்ளார். விருது விழாக்களில் சிறந்த இசையமைப்புக்காக இதுவரையில் 138 முறைகள் நாமினேட் செய்யப்பட்டுள்ள ரஹ்மான் அதில் 117 முறை விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார்.

உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எப்போது இடமுண்டு.

கனடாவின் ஒண்டாரியோ என்னும் பகுதியில் ரஹ்மான் பெயரை ஒரு சாலைக்கு வைத்து ரஹ்மானுக்கு கவுரவம் செய்துள்ளது அந்நாடு.

இசை அமைப்புக்காக ரஹ்மான் வாங்கிய முதல் சம்பளத் தொகை 50 ரூபாய்.

சர்வதேச அளவில் இசைத்துறையில் கொடிகட்டி பறந்தாலும் தமிழ் படங்களுக்கும் இசையமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்.

ஏர்டெல் நிறுவனத்துக்காக ரஹ்மான் இசையமைத்துக் கொடுத்த ‘காலர் ட்யூன்’ இன்று வரையில் உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் ரிங் டோன் ஆக உள்ளது

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers