தயாரிப்பாளரின் பங்களாவில் எனக்கு நடந்த சம்பவம்: நடிகை புகார்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

ரோல் மாடல்ஸ், வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில் உள்பட திரைப்படங்களை தயாரித்த வைஷாக் ராஜன் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைஷாக் ராஜனுக்கு சொந்தமான பங்களாவில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நடிகை கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வைஷாக் ராஜன் தயாரித்த படங்களில் ஒன்றான 'வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்' திரைப்படத்தில் திலீப் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகர் திலீப் மீது பிரபல நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகார் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஒருவர் மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers