நடிகை எமிஜாக்சன் காதலனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான எமிஜாக்சன் திருமணம் செய்யபோகும் ஜார்ஜ் பனயோட்டுவின் சொத்து மதிப்பு 400 மில்லியன் பவுண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனைச் பூர்விகமாகக் கொண்டர் எமிஜாக்சன். இவர் தமிழில் விஜய் இயக்கத்தில் மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின் ரஜினி, விக்ரம், தனுஷ், விஜய் என்ற பல முன்னணி நடிகர்களிடம் நடித்து பிரபலமானார். இதைத் தவிர இவர் வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் George Panayiotou என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எமி ஜாக்சன் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தார்.

இதையடுத்து புத்தாண்டு தினத்தன்று தனது காதனுடன் நிச்சயதார்த்தத்தை முடிந்துவிட்டதாக கூறி, அது தொடர்பான புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

இவர்களின் நிச்சயதார்த்தம் ரகசியமாக ஜாம்பியா நாட்டில் நடைபெற்றுள்ளது. இருவரும் இந்த ஆண்டில் திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஏமி ஜாக்சன் திருமணம் செய்யவிருக்கும் George Panayiotou-வின் சொத்து மதிப்பு குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியாகியுள்ளது.

அதில், அவரது மொத்த சொத்தின் மதிப்பு 400 மில்லியன் பவுண்டுகள் ( இலங்கை மதிப்பில் 92,62,04,49,460 கோடி ரூபாய்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்