என்னால் மட்டுமே முடியும்! யாருக்கும் வராது: கர்வமாக பேசிய இசைஞானி இளையராஜா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

இசைஞானி இளையராஜா படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு மட்டுமே இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது என்று கூறியுள்ளார்.

இசைக்கு எல்லாம் சொந்தக்காரார் என்று அழைக்கப்படுபவர் தான் இசைஞானி இளையராஜா. இவரின் ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு விதமாக இருக்கும். அந்த வகையில் தனக்கென்று பல கோடி ரசிகர்களை கொண்டவர் இளையராஜா.

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காப்புரிமையை விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பின் இளையராஜாவின் இந்த நடவடிக்கையால் பல குடும்பங்கள் வாழும் என்று இசையமைப்பாளர் தீனா கூறியிருந்தார்.

இதையடுத்து தற்போது இளையராஜா இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை, படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது என்று கூறியுள்ளார்.

இளையராஜா எனக்கு மட்டும் தான் தெரியும் என்று இப்படி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகள் சிலர் இவருக்கு இவ்வளவும் கர்வம் கூடாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்