யார் அந்த நபர்? உதைக்கப்போகிறேன்: நடிகை வரலட்சுமி சரத்குமார் காட்டம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை வரலட்சுமிக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது என்று வரும் வதந்திக்கு, உடனுக்குடன் ட்விட்டரில் மறுத்து வந்தார்.

தற்போது மீண்டும் வரலட்சுமிக்கு திருமணம், அதற்குப் பிறகு அவர் நடிக்க மாட்டார் என்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ''வருடக் கடைசியில் வழக்கம்போல சில வேலைக்கு ஆகாதவர்கள் எனக்கு திருமணம் ஆகப்போவதாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர், நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை, இங்குதான் இருக்கப்போகிறேன்.

வதந்தி பரப்புவர்களை பின்னாலேயே உதைக்கப் போகிறேன், எனவே அடுத்த முறை முயற்சி செய்யுங்கள், நீங்கள் யாரென்று எனக்கு தெரியும், என்னை வீழ்த்த முடியாது என கூறியுள்ளார்.

நடிகை வரலட்சுமியும், விஷாலும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின, இந்நிலையில் விஷால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்