ME TOO விவகாரம்: பிரபல நடிகை சமந்தா சொன்னது என்ன?

Report Print Kabilan in பொழுதுபோக்கு

மீடூ விவகாரத்தில் பாடகி சின்மயியை பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைமுகமாக சாடிய நிலையில், பிரபல நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இணையதளம் ஒன்றில் பழம்பெரும் நடிகை சவுகார் அளித்த பேட்டியில், ‘நான் ஒரு பெண்ணியவாதி. ஆனால் மீடூ-வை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது குப்பை’ என்று பேசியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் தனது வலைப்பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றைப் பதிவிட்டார். அதில் தனது மனைவியின் துணிச்சலைப் பாராட்டி, பாலியல் சீண்டல்கள் குறித்து தைரியமாக வெளியில் கூற வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுலின் ட்வீட்டுக்குப் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘நிறைய பெண்களை விட உங்களுக்கு சிறப்பான புரிதல் இருக்கிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers