நடிகை ராதிகா மீது பொலிஸ் நிலையத்தில் புகார்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

தனியார் கடன் நிறுவன விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா சரத்குமாருக்கு எதிராக கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகையான ராதிகா தனியார் கடன் நிறுவன விளம்பரத்தில் நடித்திருக்கும் வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் தங்களது கடன்களை அடைக்க முடியாமல் திணறி வரும் வேளையில், விளம்பரத்தில் பேசியிருக்கும் ராதிகா, அனைவரும் வாங்கிய கடன்களை உடனே கட்ட வேண்டும், அரசு எந்த கடன்களையும் தள்ளுபடி செய்யவில்லை என கூறியிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்வேளூர் காவல்நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதோடு கீழ்வேளூர் காவல் நிலையத்தில் நடிகை ராதிகா மீது புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers