என்னை குண்டு, குண்டுன்னு கிண்டல் பண்ணுவாங்க: மனம் திறந்த நடிகர் கருணாஸ் மனைவி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

என்னை குண்டு, குண்டுன்னு கிண்டல் பண்ணிட்டு பின்னர் வந்து மன்னிப்பு கேட்பார்கள் என நடிகர் கருணாஸின் மனைவி கிரேஸ் கூறியுள்ளார்.

நடிகர் கருணாஸின் மனைவியும், பாடகியுமான கிரேஸ் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கொமடி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.

இங்கு பலர் அவரின் உருவத்தை வைத்து கிண்டல் செய்கிறார்கள்.

இது குறித்து கிரேஸ் கூறுகையில், நான் பெரிசா எந்த விடயத்துக்கும் கலங்காம, மகிழ்ச்சியா இருப்பேன்.

நான் நடுவராக உள்ள நிகழ்ச்சியில் பலர் என்னை குண்டு, குண்டா, பஸ், லொறின்னு கிண்டல் பண்றாங்க.

ஆனா, அவை காமெடிக்காக மட்டுமே சொல்லப்படுது. அப்படிச் சொன்ன பிறகு, போட்டியாளர்கள் எங்கிட்ட வந்து ரொம்பவே மன்னிப்புக் கேட்பாங்க.

நானும் காமெடியா எடுத்துகிட்டு உடனே சிரிச்சுடுவேன், நான் எல்லோருக்கும் சொல்வது ஒன்று தான், சீரியஸா ஒருத்தரோட உடல் மொழியை யாரும் காயப்படுத்தாதீங்க என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்