பிரபல தமிழ் நடிகர் சீனு மோகன் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் சீனு மோகன் உடல்நலக்குறைவால் தனது 62வது வயதில் காலமானார்.

விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளவர் சீனு மோகன்.

பிரபல நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேசி மோகனின் நாடகங்கள் பலவற்றிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் உடல்நல குறைவால் சீனு மோகன் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers