55 வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை லட்சுமி மேனன்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

இந்திய அளவில் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கும் சுஹெல் சேத் 37 வயது நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மாடலும், பாலிவுட் நடிகையுமான லட்சுமி மேனனுடன் சுஹெல் சேத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலானது.

அதாவது 55 வயதான சுஹெல் சேத் 37 வயதான லட்சுமி மேனனை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் சுஹெல் சேத் திடீரென தனது காதலி லட்சுமி மேனனை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள லட்சுமி மேனன் வீட்டில் எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்தில் பிரபல அரசியல்வாதிகள் பிரஃபுல் படேல், அமர் சிங், ஜே பாண்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers