தனது அனைத்து சொத்துகளையும் தானம் செய்யும் பிரபல நடிகர்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தான் இதுவரை சம்பாதித்த பல கோடி ரூபாய் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக ஹாலிவுட் நடிகர் சோவ் யுன் ஃபேட் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல நடிகர் சோவ் யுன் ஃபேட்(63) பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். ஹிடன் டிராகன், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்: அட் வேர்ல்ட்ஸ் எண்ட் போன்ற குறிப்பிடத்தக்க ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், தனது சொத்துக்கள் முழுவதையும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

AFP

எனினும், சோவ் யுன் ஃபேட்டின் சொத்து மதிப்பு சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் என்று ஹாங்காங் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சோவ் யுன் ஃபேட் மிகவும் எளிமையான மனிதர்.

தான் நடித்த படத்தைக் கூட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கியே பார்க்கும் இவர், மக்களோடு நின்று பேருந்திலேயே பயணம் செய்பவர் என்று கூறுப்படுகிறது. சொத்துக்களை வழங்கும் முடிவிற்கு சோவ்-வின் மனைவி ஜாஸ்மின் டேனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோவ் யுன் ஃபேட் கூறுகையில், ‘இந்த பணத்தை எப்போதும் வைத்திருக்க முடியாது. இறப்பிற்கு பின் அந்த சொத்துக்களை கொண்டு செல்ல முடியாது. ஒருநாள் போய் சேர்ந்துவிட்டால், அதை மற்றவர்கள் பயன்படுத்த கொடுக்க வேண்டும். அதைதான் செய்கிறேன்.

என் இறப்பிற்கு பின் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க இருக்கிறேன். இந்த உலகில் எதும் நிரந்தரமானதல்ல. இங்கு எதையும் நிரந்தரமாக வைத்துக் கொண்டிருக்க முடியாது என்று என் குரு கூறுவார்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு, போர்ப்ஸ் வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் சோவ் யுன் ஃபேட் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

REUTERS

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers