நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய எனக்கு வந்துள்ள நிலை: நடிகை ஸ்ருதி வேதனை

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீடு மூலம் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் வன்கொடுமை குறித்து வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்..

இதற்கு நடிகர் அர்ஜுன் எதிப்பு தெரிவித்து, ஸ்ருதி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். பதிலுக்கு ஸ்ருதியும், அர்ஜுன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்தார்.

இவர்களது இருவரது வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் அளித்தபின்னர் தனக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது வேதனையளிக்கிறது என நடிகை ஸ்ருதி கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்ருதி ஹரிஹரன் கூறியிருப்பதாவது: மீ டூ புகார் கூறுவதற்கு முன் எனக்கு வாரத்தில் 2 பட வாய்ப்பு கன்னட சினிமாவிலிருந்து வரும், இப்போது வருவதில்லை.

காரணம், மீ டூ புகார் கூறியதுதான். என்னை தங்களது படத்திற்கு தேர்வு செய்ய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.

இது எனக்கு கவலை அளித்தாலும் சோர்ந்துவிடவில்லை, தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers