எனக்கு புற்றுநோயா? பிரபல நடிகரின் ட்வீட்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல ஹிந்தி நடிகர் ஷாகித் கபூருக்கு புற்றுநோய் இருப்பதாக வெளியான செய்திக்கு அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாகித் கபூர். இவர் தற்போது தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ எனும் திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஷாகித் கபூரின் வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவின. இதனால் ஷாகித்தின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஷாகித் கபூர் தன் மீதான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘நண்பர்களே, நான் முழு உடல்நலத்துடன் இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers