நடிகை தேவயானியின் தம்பிக்கு நேர்ந்த கசப்பான சம்பவம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் ஐபோன் ஆர்டன் செய்து தான் ஏமாந்துபோன சம்பவத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நகுல் தனது மனைவி ஸ்ருதிக்கு திருமண நாள் வருவதையொட்டி, ஐபோன் பரிசளிக்க நினைத்து, ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்டில் கடந்த மாதம் 29 ஆம் தேதி ஆர்டர் செய்தார்.

அவர் வீட்டில் இல்லாத நேரம் போனை டெலிவெரி செய்துவிட்டு சென்றுவிட்டனர். பார்சலை திறந்து பார்த்தபோது அதற்குள் போலி ஐபோன் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து நிறுவனத்திடம் போன் செய்து கேட்டபோது, அவர்கள் தாங்கள் அனுப்பவில்லை என கூறியள்ளனர்.

தொடர்ந்து பேசிய நகுல், ஏராளமான கேள்விகளை கேட்டதையடுத்து, ‘எங்கள் நிறுவனத்தின் ஆட்கள் வந்து அந்த போனை வாங்கிவிட்டு, உங்கள் பணத்தை திருப்பித் தந்துவிடுவார்கள்’ என்று கூறினர்.

ஆனால் யாரும் வராத காரணத்தால், மீண்டும் போன் செய்தபோது, 12 நாட்களுக்குள் வருவார்கள் என கூறியுள்ளனர். இந்த கசப்பான சம்பவத்தை நகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் வரவில்லை. மீண்டும் ஃபோன் செய்து கேட்டார் நகுல். ‘அதற்கு அவர்கள் 12 நாட்களுக்குள் வருவார்கள்’ என்று தெரிவித்துள்ளனர். இதனால் வெறுப்படைந்துள்ள நகுல், இந்த கசப்பான அனுபவம் பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்