பத்து வயது சிறியவரை திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா: மீண்டும் எழுந்த கண்டனம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் திருமணத்தில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டதாக பீட்டா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், அவரை விட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸிற்கும் திருமணம் நடந்தது.

ஜோத்பூர் அரண்மனையில் இந்த ஜோடி கிறித்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் என இருமுறை திருமணம் செய்துகொண்டது.

ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில், அரண்மனையின் முன்னால் வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்ததால் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது.

பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ்வாறு வானவேடிக்கை நிகழ்த்தி மாசுபடுத்துவது நியாயமா என பலர் கேள்வி எழுப்பினர். அத்துடன் சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டா, பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் திருமணத்தில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், ‘உங்கள் திருமணத்தில் யானைகள் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தன. குதிரைகள் சவுக்குகளால் துன்புறுத்தப்பட்டன.

திருமணத்தில் குதிரைகளையும், யானைகளையும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். வாழ்த்துகள், ஆனால் விலங்குகளுக்கு அன்று மகிழ்ச்சியான நாளாக இல்லை என்பதற்காக வருந்துகிறோம்’ என தெரிவித்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers