திருமணத்திற்கு வரும் விருந்தினருக்கு பிரியங்கா சோப்ரா கொடுக்கப் போகும் பரிசு என்ன?

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகை பிரியங்கா சோப்ரா தனது திருமணத்திற்கு வரும் விருந்தினருக்கு என்ன பரிசு அளிக்கப் போகிறார் என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸுக்கும் ஜோத்பூர் அரண்மனையில் நாளை திருமணம் நடைபெற உள்ளது.

நாளைய தினம் ஹிந்து முறைப்படியும், 3ஆம் திகதி கிறித்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக உமைத் பவனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளப் போவதாக தெரிய வந்துள்ளது. திருமணத்தை தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பையில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், நிக் ஜோனஸ் தனது குடும்பத்தினருடன் ஏற்கனவே இந்தியா வந்துவிட்டார்.

இந்நிலையில், திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு, பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஜோடி வெள்ளிக்காசு பரிசளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த காசில் ஒரு பக்கம் NP என்றும், மறுபக்கத்தில் விநாயகர் மற்றும் லட்சுமி உருவம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் இந்த காசுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, இவர்களின் திருமணத்தை முன்னிட்டு டிசம்பர் 3ஆம் திகதி வரை, உமைத் பவன் அரண்மனைக்குள் பொதுமக்கள் நுழைய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு அரண்மனைக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...