இளம்பெண்களுடன் பல இரவுகள்.. சூதாட்ட மயக்கம்: வெளிச்சத்துக்கு வந்த நடிகர் ஜாக்கிசானின் உண்மை வாழ்க்கை

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

அதிரடி திரைப்படங்களால் உலக ரசிகர்களை தன்பால் ஈர்ந்த மாபெரும் நடிகர் ஜாக்கி சான். ஆனால் இவரது துவக்க கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக இருந்தது என தனது Never Grow U என்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஹாங்காங்க் நகரில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜாக்கி சான், உலகின் மிக அதிக ஊதியம் பெறும் கலைஞராக வளர்ச்சி கண்டதில் அவரது கடின உழைப்பும் மன உறுதியும் ஒருசேர இணைந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் திரைப்படத் துறையில் நுழைந்து சண்டைக் கலைஞராக உருவெடுத்து பின்னர் ஹீரோவாகவும் பெயரும் புகழும் அடைந்த நிலையில் அவரது வாழ்க்கை தடம் மாறத் துவங்கியதாக தெரிவித்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் வருவாயின் பெரும்பகுதியை பாலியல் தொழிலாளிகளுக்கும், சூதாட்டத்திலும் தொலைத்ததாக கூறும் ஜாக்கி சான், தமது சொந்த பிள்ளைகளை கூட கவனிக்க முடியாமல் போனது என்றார்.

வாரத்தில் அதிக நாளும் இரவில் ஒவ்வொரு இளம் பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறும் ஜாக்கி சான், மதுவுக்கும், மாதுவுக்கும், சூதாட்டத்திற்கும் செலவிட்ட தொகை கணக்கில் இல்லை என தெரிவித்துள்ளார்.

பல முறை மது போதையில் வாகன விபத்தும் ஏற்படுத்தியுள்ளதாக கூறும் ஜாக்கி சான், நடிகை ஜோவான் லின்னுடன் அந்த காலத்தில் காதலை விட தமக்கு வெறி இருந்தது என்றும், ஜோவான் கர்ப்பிணி என தெரியவந்ததும், வலுக்கட்டாயமாக திருமணம் நடந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பின்னரும் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என கூறும் ஜாக்கி சான், 1990 ஆம் ஆண்டு ஆசியா அழகி பட்டம் பெற்ற Elaine Ng Yi-Lei என்பவருடன் காதலில் விழுந்துள்ளார்.

அவருடன் பிறந்த குழந்தையே தற்போது கனேடிய ஓரின பெண்ணை திருமணம் செய்துகொண்டு சர்ச்சையில் சிக்கியவர்.

மட்டுமின்றி போதை மருந்து வழக்கில் ஜாக்கி சானின் மகனும் பாடகருமான Jaycee Chan கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers