நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸ் திருமணம்: மும்பைக்கு விரையும் ஹாலிவுட் பிரபலங்கள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோன்ஸின் திருமணம் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, ஹாலிவுட் பிரபலங்கள் சிலர் மும்பைக்கு வந்துள்ளனர்.

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாப் பாடகர் காதலித்து வந்த நிலையில் வரும் டிசம்பர் 2ஆம் திகதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. கடந்த மாதம் பிரியங்கா-ஜோன்ஸ் இருவரும் ஜோத்பூர் சென்று, தாங்கள் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பவன் அரண்மனையை பார்வையிட்டனர்.

இந்நிலையில், தங்களது திருமணத்தை அமெரிக்காவில் பதிவு செய்வதற்கான பணிகளில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் இருவரும், கலிபோர்னியாவில் உள்ள பெவரிலி ஹில்ஸ் பகுதி நீதிமன்றத்தில் திருமண உரிம சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து, நிக் ஜோனாஸ் தனது சகோதரன் ஜோ ஜோனாஸுடன் இந்தியா விரைந்தார். இந்நிலையில், ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ உட்பட சில ஹாலிவுட் படங்களில் நடித்தவரும், ஜோ ஜோனாஸின் வருங்கால மனைவியுமான ஷோபி டர்னரும் மும்பைக்கு வந்துள்ளார்.

இவர்களைத் தவிர, மேலும் சில ஹாலிவுட் பிரபலங்களும் இந்தியாவின் மும்பை நகருக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் ஆகியோர், மும்பை ஜூஹுவில் உள்ள ஓட்டலில் நண்பர்களுக்கு நேற்றைய தினம் விருந்து வைத்தனர்.

அதில் நடிகை ஆலியா பட், பிரியங்காவின் சகோதரர் சித்தார்த் சோப்ரா, ஷோபி டர்னர், ஜோ ஜோனாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers