நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்க வேண்டும்: பிரபல நடிகையின் சர்ச்சை கருத்து

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

#MeeToo என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக சமூக ஊடகத்தில் எழுதும் இயக்கம் ஹாலிவுட் தொடங்கி தற்போது இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் இந்த இயக்கம் இந்தியாவில் வேகம் பிடித்தது. திரைப்பட நடிகர்கள், கவிஞர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல பெண்கள் புகார் செய்தனர்.

இந்நிலையில் இந்த மீடூ குறித்து பாலிவுட்டின் பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவரிடம், நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறீர்களா?" என்று கேட்கப்பட்டபோது, கலகலவென்று சிரித்த அவர், "நான் அப்படி துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை. அப்படி உள்ளாகி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது உங்களுக்குச் சொல்ல என்னிடம் பதில் இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்த அவர், இது மிகவும் பொருத்தமான கேள்வி. நீங்கள் எப்படி நடத்தப்பட விரும்புகிறீர்களோ, அப்படி நடத்தப்படுவீர்கள் என்று கூறினார்.

இந்த கருத்து பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்தியாவில் மீடூ இயக்கம் தொடங்கியது முக்கியமானது என்று கூறிய அவர், பிறகு, பல பெண்கள் மிகத் தீவிரமாக இல்லாத குற்றச்சாட்டுகளையும், தனிப்பட்ட பகையாலும், பிரபலமடைவதற்கும் இதனைப் பயன்படுத்தி இந்த இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்வதாகக் குறிப்பிட்டார்.

பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து சிறுமைப்படுத்தும் வகையிலும், கூருணர்ச்சி இல்லாமலும் இந்த தமது பேட்டி எடிட் செய்யப்பட்டதாகவும் டிவிட்டரில் தெரிவித்தார் பிரீத்தி.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்