விருது விழாவுக்கு தேவதை போல வந்த ஐஸ்வர்யா ராய்: அம்மா ஸ்ரீதேவியை நினைவுபடுத்திய ஜான்வி

Report Print Kabilan in பொழுதுபோக்கு

மும்பையில் நடந்த விருது விழாவுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி மகள் ஜான்வி ஆகியோர் அணிந்து வந்த உடை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

லக்ஸ் கோல்டன் ரோஸ் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களான ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், அக்‌ஷய்குமார், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், அவரது தாயாரைப் போலவே உடை அணிந்திருந்தார். அவர் வெள்ளை நிற கவுனில் ஒய்யாரமாக போஸ் கொடுத்தார்.

தற்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய், முதல் முறையாக தனது மகள் ஆராத்யாவை விட்டுவிட்டு விழாவிற்கு வந்திருந்தார். சிவப்பு நிற உடையில் தேவதை போல காட்சியளித்த ஐஸ்வர்யா ராய், சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்தார்.

பின்னர் விருதை பெற்றுக் கொண்டு புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தார். இவர்களைத் தவிர நடிகைகள் கரீனா கபூர், ஆலியா பட், கஜோல் மற்றும் நடிகர்கள் அக்‌ஷய்குமார், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்