மூத்த திரைப்பட நடிகர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகர் அப்துல்லா தனது 82வது வயதில் காலமானார்.

மலையாளத்தில் 35-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள கேடிசி அப்துல்லா கடந்த 1977-ஆம் ஆண்டு திவீப்பு திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

கடமா, நீலக்‌ஷம் போன்ற திரைப்படங்களில் அப்துல்லாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அப்துல்லா கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.

அப்துல்லாவின் மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள திரையுலகினர் அப்துல்லா இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers