நான் செத்துட்டேனா? இன்னும் உயிரோட தான் இருக்கேன்: கதறிய இயக்குநர்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி தவறு என்றும், இன்னும் தான் உயிரோடு தான் இருப்பதாகவும் ஹாலிவுட் இயக்குநர் ஸ்பைக் லீ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டான் லீ(95) காலமானார்.

மார்வல் நிறுவனத்தின் எழுத்தாளராக இருந்த அவரது இறப்புக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்தைச் சேர்ந்த ஊடகம் ஒன்று ஸ்டான் லீ இறப்பு குறித்து தவறுதலாக செய்தி வெளியிட்டது. அதாவது ஸ்டான் லீ என்ற பெயருக்கு பதிலாக ஸ்பைக் லீ என்று பெயரை மாற்றி வெளியிட்டு விட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹாலிவுட் பிரபலங்கள் பலர் ஸ்பைக் லீக்கு தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். ஸ்பைக் லீ என்பவர் மால்கோம் எக்ஸ், டு தி ரைட் திங் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆவார்.

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அறிந்த ஸ்பைக் லீ, உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாக பதிவிட்டார்.

அதில் அவர் கூறுகையில், ‘இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ஸ்டான் லீ, நானா இறந்தது? இன்னும் இல்லை. அதோடு நான் இன்னும் வாழ முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்