பிரபல நடிகையின் திருமணத்திற்கு தயாராகும் ஜோத்பூர் அரண்மனை! அதன் ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான பிரியங்கா சோப்ரா தன்னுடைய திருமணம் அரண்மனையில் தான் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளதால், அவரின் பெற்றோர் ஜோத்பூர் அரண்மனையை வாடகைக்கு எடுத்துள்ள்தாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் நேருக்கு நேராக மோதிக் கொள்ளும் நடிகைகள் யார் என்றால் பிரியங்கா சோப்ரா- திபீகா படுகோனே தான், இவர்கள் இருவருக்குள் இருக்கும் பனிப்போரை பல மேடைகள், பல பேட்டிகள் பார்த்துள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் தான் தீபிகா படுகோனே-ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவர்களின் திருமணம் சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. இதையடுத்து பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம் அடுத்த மாதம் 1-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த ஜோடியின் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடக்கிறது.நி க் ஜோனாஸ், பிரியங்கா சோப்ராவை விட 11 வயது இளையவர் என்பதால் இவர்களின் காதல் விவகாரம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானாலும், தற்போது இருவரும் திருமணம் செய்யவுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் நடைப்பெற்ற இவர்களின் நிச்சயதார்த்த பார்ட்டில் நிக் ஜோனாஸ், பிரியங்காவுக்கு 2 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார். பிரியங்கா திருமணத்திற்கு மட்டும் 10 கோடிக்கு ஷாப்பிங் செய்துள்ளார்.

மேலும், திருமண புகைப்படங்களை வெளியிடும் உரிமையை இருவரும் 18 கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.

4 நாட்கள் நடைபெறவிருக்கும் இவர்கள் திருமணம் ஒவ்வொரு நாளும் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிரியங்கா சோப்ராவிற்கு அரசு குடும்பத்து திருமணம்போல் நடக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.

இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில், அவர்களின் குடும்பத்தார் ஜோத்பூரில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையை தேர்வு செய்துள்ளனர். இந்த அரண்மனையின் ஒரு நாள் வாடகை மட்டும் 2 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் பிரபலங்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நிக் மற்றும் பிரியன்கா குடியேறுகிறார்கள். இதற்காக அங்கு ஆடம்பரமான வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்