சின்மயிக்கு தமிழ் திரைப்படத்துறையில் அதிரடி தடை விதிப்பு: வெளியான உண்மை காரணம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
340Shares

சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து உறுப்பினர் சந்தா கட்டாததால் தான் நீக்கப்பட்டார் என்ற கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து முழுமையான விவரங்களை தமிழ்நாடு டப்பிங் யூனியன் இணை செயலாளர் ராஜேந்திரன் விளக்கியுள்ளார்.

பாடகி சின்மயி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தற்போது டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன், அடுத்து எந்த துறை தம்மை நீக்குவார்கள் என தெரியவில்லை என பதிவிட்டார்.

கடந்த 2 ஆண்டுகளாக சந்தா கட்டணத்தை சின்மயி செலுத்தவில்லை எனவும் இதனாலேயே யூனியனில் இருந்து அவரை நீக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து பேசிய டப்பிங் யூனியன் இணை செயலர் ராஜேந்திரன், சின்மயி டப்பிங் யூனியன்ல இருந்து நீக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அதுக்கு சின்மயி சொல்ற மாதிரி வருடா வருடம் யூனியன் உறுப்பினர்கள் யுனியனுக்கு செலுத்த வேண்டிய சந்தாவை இரண்டு வருஷமா கட்ட தவறியது மட்டுமில்லை.

அவர் யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் தமிழ் நாடு டப்பிங் யூனியலில் கிட்டத்தட்ட 15 புகார்கள் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது என்று யூனியன் நிர்வாகத்தை எதிர்த்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதற்கும் அவர் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்தே உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டார்

எந்த உறுப்பினருக்கும் சந்தா கட்ட நினைவூட்டும் வழக்கம் யூனியனில் இருந்ததேயில்லை.

ஜனவரி 31ம் திகதிக்குள்ல் புது வருடத்திற்கான சந்தாவைக் கட்டியாக வேண்டும் என்று உறுப்பினர் அட்டையிலேயே போடப்பட்டிருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்