செல்ஃபி எடுத்தவரின் செல்போனைத் தட்டிவிட்டதற்காக வருத்தம் தெரிவித்த சிவகுமார்: வீடியோ வெளியீடு

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட விவகாரம், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து, நடிகர் சிவகுமார் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகர் சிவகுமார் நடிப்பதை தவிர்த்துள்ள நிலையில், அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் வெற்றிகரமான நடிகர்களாக வலம் வந்துகொண்ருக்கிறார்கள்.

இந்நிலையில், கடை திறப்பு விழா ஒன்றிற்கு நடிகர் சிவகுமார் சென்றுள்ளார். அங்கு ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது, சிவகுமார் அவரது செல்போனை கீழே தட்டிவிட்டார்.

சிவகுமாரின் இந்த செயலால் குறித்த ரசிகர் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியானதால், நடிகர் சிவகுமாரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தற்போது தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக வீடியோ ஒன்றை நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers