அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை புதிய படத்தில் இருந்து நீக்கம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் அர்ஜூன் மீது மீ டூ பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன், புதிய படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிபுணன் என்ற படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீ டூ மூலமாக புகார் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரை மறுத்த அர்ஜூன், நடிகை ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

எனினும், ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் அடிப்படையில் அர்ஜூன் மீது பெங்களூரு பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ஒப்பந்தமாகியிருந்த ‘Daar Tapsidna Devru' எனும் படத்தில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் லிங்கதேவ்ரு கூறுகையில்,

‘இந்தப் படத்தின் படப்பிடிப்பு 45 நாட்கள் நடக்க இருக்கிறது. ஸ்ருதி ஹரிஹரனின் கால்ஷீட் 30 நாட்கள் தேவை. ஆனால், அவர் ஜனவரி மாதத்திற்கு பின் வர இயலாது என்று கூறிவிட்டார்.

அதோடு அர்ஜூன் மீது தொடுத்துள்ள வழக்கு காரணமாக, அவர் நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டும் என்பதால் அவரை எங்களால் நடிக்க வைக்க முடியாது. வேறு ஹீரோயினைத்தான் தேட வேண்டும்.

இந்த விவகாரம் நான்கு சுவருக்குள் முடித்திருக்க வேண்டும். பொதுவெளியில் வந்து ரசிகர்கள் மோதிக்கொண்டு மோசமாகிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers