கள்ளக்காதல் தவறில்லை... அப்புறம் மீ டூ என்ன வெங்காயம்? இயக்குநர் விளாசல்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

எவனும் புத்தனில்லை என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யும் விழா நடைபெற்றது.

இதில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:

இப்போது எங்கே பார்த்தாலும் மீ டூ, மீ டூ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். புகார் என்ற பெயரில் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆணுக்கு பெண்ணின் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு வருவது இயல்பு. இதுதான் இயற்கை. ஆனால் இப்போது ஆணுடன் ஆண் உறவு வைத்துக்கொள்ளலாம் பெண்ணுடன் பெண் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று சட்டமே சொல்கிறது.

அதுமட்டுமா? திருமணமான ஒரு பெண், இன்னொருவருடன் உறவு வைத்துக்கொள்வதை கள்ளக்காதல் என்றெல்லாம் சொல்லக்கூடாது என்று கூட சட்டம் வந்துவிட்டது.

அப்படியெல்லாம் வந்துவிட்ட கட்டத்தில், ஒரு ஆணும் பெண்ணும் ஈர்ப்பு இயல்பு என்கிற விஷயத்தில், மீ டூ எனும் வெங்காயம் எங்கே வந்தது? யோசித்துப் பாருங்கள்.

இவ்வாறு ஆர்.வி.உதயகுமார் பேசினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்