திருடன் பட்டம் வாங்க என் அம்மா என்னை பெத்துவிடல! கொந்தளிக்கும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘சர்கார்’ படத்தின் கதை திருடப்பட்டது என்பதை, படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் ‘சர்கார்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும், ‘செங்கோல்’ எனும் பெயரில் எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருந்ததாகவும் வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில் செங்கோல் கதையை எழுத்தாளர் சங்கத்தில் படித்துள்ளார்கள். ஆனால், தன்னுடைய முழுக்கதையை அவர்கள் படிக்கவில்லை என்றும், தான் கொடுத்த ஆறு பக்க மூலக்கதையை மட்டுமே அவர்கள் படித்தார்கள். இது ஒரு தலைபட்சமானது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக அவர் பேசியபோது, ஒரு கட்டத்தில் உணர்ச்சி மிகுதியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘பாக்யராஜ் போன்றவர்களைப் பார்த்து தான் சினிமாவுக்கு வந்தேன்.

அதனால் அவர்கள் திருட்டுப் பட்டம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு அப்படியே போக முடியாது. அதற்காக என்னை எங்க அம்மா பெத்துவிடவில்லை.

இங்கு பசியை அடக்கி, தூக்கத்தை அடக்கி, காமத்தை அடக்கி எல்லாத்தையும் அடக்கி தவ வாழ்க்கை வாழ்ந்து, 18 ஆண்டுகள் போராடிய பிறகு அவர் கூப்பிட்டு திருடன் எனக் கூறினால், அதைக்கேட்டு அமைதியாக போவதற்கு நான் தயாராக இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்