நான் அங்கு போயிருக்க கூடாது: தமிழ்பெண் என்பதால்... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பாலியல் தொல்லை பிரச்னையை தானும் சந்தித்துள்ளேன் எனவும் பயம் காரணமாக வெளியில் சொல்லவில்லை எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.

மீடூ இயக்கம் சினிமா துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசி வருகிறார்கள்.

இது குறித்து பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் கூறுகையில், மீடூ பிரச்சனையில் நானும் சிக்கியிருக்கிறேன். ஒரு பார்டிக்கு சென்ற போது அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும் மதுரையை பூர்விமாக கொண்ட தமிழ் பெண்.

வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. தவறு என்மீது தான். நான் அந்த பார்டிக்கு போயிருக்க கூடாது.

போகாமலிருந்திருந்தால், அந்த கசப்பான அனுபவத்தைத் தவிர்த்திருக்கலாம். பெண்களிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால் அந்த இடத்திலே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்