உன் அம்மாவையும் இப்படி தான் பேசுவியா? கொந்தளித்த நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

டுவிட்டரில் நபர் ஒருவர் பதிவிட்ட பதிவுக்கு கோபமாக பதில் பதிவிட்டுள்ளார் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன்.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சின்மயிக்கு பிரபல நடிகையும், இயக்குனருமான லஷ்மி ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிலையில் இது தொடர்பான செய்தி டுவிட்டரில் பதிவிடப்பட்டது.

இதற்கு நபர் ஒருவர், சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் தவறானவர்கள் என கூறும் வகையில் டுவீட் போட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்த லஷ்மி ராமகிருஷ்ணன், ஏண்டா உனக்கெல்லாம் புத்தியே வராதா, உன் அம்மாவையும் இப்படி தான் பேசுவியா?

சமூகவலைதளங்களிலும் துன்புறுத்தலுக்கு எதிரான விடயத்தை தொடங்க வேண்டும், இது போன்ற போலி ஐடி-க்களை வைத்திருப்பவர்களை கிழித்தெறிய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...