படுக்கைக்கு அழைத்ததாக சினிமா பிரபலம் மீது நடிகைகள் புகார்: பயத்தில் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை முயற்சி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

மீ டூ பிரச்னை விஷ்வரூபம் எடுத்த பிறகு நடிகைகளால் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாலிவுட் சினிமா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனிர்பென் பிளா தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

தமிழ் மற்றும் இந்தி படவுலகில் மீடு இயக்கம் பெரிய அளவில் புயலை கிளப்பி இருக்கிறது. நடிகர் நானாபடேகர், இயக்குனர் சுபாஷ்காய் உள்ளிட்டோர் இதில் சிக்கியுள்ளனர்.

அதே போல வைரமுத்துவும் சின்மயி விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்யும் கம்பெனியான க்வான் எண்டர்டைமெண்ட் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் அனிர்பென் பிளா மீது நடிகை உட்பட நான்கு பெண்கள் புகார் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களை அனிர்பென் பாலியல் உறவுக்கு அழைத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு நேற்று முன் தினம் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அவர் தற்கொலைக்கு முடிவு கடிதம் எழுதி வைத்துவிட்டு நவிமும்பை வாஷி கடல் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் அனிர்பென் கடல் பாலத்தில் ஏறி கீழே குதிக்க முயன்ற சமயத்தில் அவரை காப்பாற்றினார்கள்.

பின்னர் அவருக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டது.

நடிகைகளின் புகாரால் தனது கம்பெனி பங்குதாரர்கள் தன்னை கம்பெனியில் இருந்து விலகும்படி நிர்ப்பந்தம் கொடுத்ததாகவும், இதனால் அந்த பயம் மற்றும் அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை என்றும் பொலிசில் அனிர்பென் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்