வேதனையாக கடந்த நாட்கள்: பாலாஜியுடன் எதிர்பார்த்தோம்... ஆனால் நடக்கல: நித்யா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகிய இருவரும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை மறந்து இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் போன்று, அதற்கு பின்னரும் 100 நாட்கள் பாலாஜி எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்து இணைந்து வாழலாம் என நித்யா கூறியிருந்தார்.

அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார் நித்யா.

அக்டோபர் 16 எங்க பொன்ணு போஷிகாவுக்குப் பிறந்தநாள். கடந்த சில வருடங்களா அவ பிறந்த நாள் அன்னைக்கு அவ அப்பா கிட்டப் பேசலை.

ஆனா பேசணும்னு ஆசைப்படுவாள். அந்த நாட்கள் எனக்கு அப்படியொரு வேதனையாக கடந்தன. இந்த பிறந்த நாளை நிச்சயம் அப்பா அம்மா கூடச் சேர்ந்து கொண்டாடுவானு எதிர்பார்த்தேன்.

ஆனா அது நடக்கலை. பேசணும்னு ஆசைப்பட்டா. அதுகூட நான்தான் போன் பண்ணிப் பேச வச்சேன். அவருக்கு மகளின் பிறந்த நாள் ஞாபகமாவது இருந்ததா தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்