கோடிக்கணக்கான சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதிவைத்த நடிகை ஸ்ரீவித்யா: இறுதியில் நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

புற்றுநோயால் இறந்த நடிகை ஸ்ரீவித்யா தனது சொத்துக்களை ஏழை குழந்தைகளுக்கு எழுதி வைத்தும் அது அவர்களுக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீவித்யா கடந்த 2006-ஆம் ஆண்டு புற்றுநோயால் இறந்துபோனார்.

திரையில் பிரபல நட்சத்திரமாக ஜொலித்தாலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அதிக சோகங்களையே கொண்டது.

35 வயதுக்கு பின்னர், மணவாழ்க்கையில் விதி விளையாட துவங்கியது. சறுக்கி விழுந்தார்

பின்னர் தனியாக வாழ பழகிய ஸ்ரீவித்யாவுக்கு காலம் கொடுத்த சம்மட்டி அடி தான் புற்றுநோய்.

நோய் வாய்த்த பின்னர் பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி தவித்தார். எல்லாமே சூன்யமாகி போனது. தனிமை, ஏகாந்தம் என்ற வட்டத்துக்குள் சூழ்நிலை கைதியின் நிலைக்கு ஆளானார்.

அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார்.

அதனை நம்பி ஒருவரிடமும் ஒப்படைத்தார். ஆனால் அதில் எள்ளளவும் அந்த குழந்தைகளுக்கு போய்ச் சேரவில்லை என்பதே கசப்பான உண்மை.

மரணப் படுக்கையிலும் வசதியற்றவர்களுக்கு உயில் எழுதிய உன்னதம் ஸ்ரீவித்யா தவிர வேறு யாருக்கும் வராது. இதமான இதயத்தை அது பிரதிபலித்தது என கூறினால் மிகையாகாது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்