அவள் ஆன்மாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்: புகைப்படத்துடன் பிரபல நடிகர் வெளியிட்ட உருக்கமான பதிவு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் சல்மான்கான் தான் உயிராக நேசித்து வளர்த்த நாய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் சல்மான்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் என் மிக அழகான என் அன்பு இன்று போய்விட்டது. கடவுள் அவள் ஆன்மாவை ஆசீர்வதிக்கட்டும் என பதிவிட்டு நாயின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய இன்னொரு பதிவில், என் அன்பு முத்தங்கள் என நாய்க்கு முத்தமிடும் புகைப்படத்தை சல்மான்கான் உருக்கமாக வெளியிட்டுள்ளார்.

சல்மான்கான் குறித்து நாய் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். கடந்த மே மாதம் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடவுளே! என் அன்பான நாய் எனது பாடலை தொலைக்காட்சியில் பார்க்கிறது என மகிழ்ச்சியாக பதிவிட்டார்.

இந்த பதிவை டுவிட்டரில் 50,000 பேர் லைக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்