25 ஆண்டுகளுக்கு முன் நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
79Shares

ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகரான சையீப் அலிகான், தானும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட ஆண்களும், பெண்களும் #MeToo எனும் ஹேஷ்டேக் மூலமாக தாங்கள் சந்தித்த இன்னல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

திரைத்துறை மட்டுமன்றி பல்வேறு துறைகளில் உள்ளவர்களும் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், பிரபல ஹிந்தி நடிகர் சையீப் அலிகான் தானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் , ‘பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக துணை நிற்கிறேன். அவர்களது கடந்து வந்த அந்த கடினமான பாதையை என்னால் உணர முடிகிறது.

நானும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டேன். அதனை நினைத்து எனக்கு இப்போது கோபம் உள்ளது. சில மனிதர்கள் இந்த வலியை புரிந்துகொள்ள மாட்டார்கள்.

மற்ற மனிதனின் வலியை புரிந்துகொள்வது மிக கடினமானது. கொடுக்கப்பட்ட புகார்களின் உண்மை தன்மையை கண்டறிந்து, தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் நிச்சயம் தண்டனை பெற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்