காரில் வைத்து தமிழ் இயக்குனர் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்த பெண்: இயக்குனர் பதிலடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
90Shares

பாடல் எழுத வாய்ப்பு கொடுக்காத காரணத்தினால் தன் மீது பெண் கவிஞர் அபாண்டமாக பழிசுமத்துகிறார் என இயக்குனர் சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை தனது பேஸ்புக் பக்கத்தில், கடந்த 2017-ம் ஆண்டு ஒரு இளம் இயக்குநர் 2005-ம் தனக்கு காரில் வைத்து பாலியல் தொல்லை பற்றி பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தார்.

இப்போது மீ டூ பிரச்சாரம் இணையத்தில் சூடு பிடித்திருக்கும் தருணத்தில் மீண்டும் அந்த பதிவை ஷேர் செய்து அந்த இயக்குனர் சுசி கணேசன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு விளக்கமளித்துள்ள சுசி கணேசன், லீனா மணிமேகலை உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி, வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள்.

அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலேயே, ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவிநெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர்.

லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள்- உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில், சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்