நடிகை சிம்ரனுக்கு பிரபல இயக்குனரால் நேர்ந்த கொடுமை: பெயரை தைரியமாக வெளியிட்டார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
592Shares

அம்மா பக்கத்து அறையில் இருக்கும்போதே பிரபல நடிகையின் ஆடையை அவிழ்த்து சில்மிஷம் செய்ததாக இயக்குனர் சஜித்கான் மீது புகார் எழுந்துள்ளது.

பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது 3 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் சுரி, சஜித் கான் மீது புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 2012ம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தது. ஹிம்மத்வாலா படத்திற்கு நடிகர், நடிககைளை தேர்வு செய்து கொண்டிருந்தார்.

ஆடிஷனுக்காக தனது வீட்டிற்கு வருமாறு சஜித் கான் போன் செய்த நிலையில் நான் வீட்டிற்கு சென்றேன்.

சிறிது நேரத்தில் அவர் என்னை ஆடையை அவிழ்க்குமாறு கூறினார். நான் ஆடையை அவிழ்க்காமல் நின்று கொண்டிருந்தேன்.

சஜித் கான் என் மேலாடை கீழே இழுத்து அவிழ்க்கப் பார்த்தார். நான் அதிர்ச்சி அடைந்து அவரை திட்டத் துவங்கினேன். உடனே அவர் கத்தாதே, பக்கத்து அறையில் என் அம்மா இருக்கிறார். அவர் காதில் விழுந்துவிடப் போகிறது என்றார்.

உடனே நான் அங்கிருந்து வெளியே வந்து பின்னர் செல்போனில் அவரின் எண்ணை நீக்கிவிட்டேன். ஆனால் அவர் ஒரு மணிநேரத்தில் எனக்கு மீண்டும் போன் செய்து என்னிடம் பேசினார்.

நான் அவரை திட்டிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டேன்.

சஜித் பற்றி வெளியே சொல்ல வேண்டும் என்று 6 ஆண்டுகளாக நினைத்தேன். ஆனால் அவர் பெரிய ஆள் என்பதால் யாரும் கேட்கமாட்டார்கள் என்பதால் சொல்லவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்