உலக அரங்கில் பரதநாட்டியத்திற்கு பெருமை சேர்த்த பிரபல நடிகை

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு
293Shares
293Shares
ibctamil.com

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி பதித்தவர் நடிகை ருக்மணி விஜயகுமார்.

கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ருக்மணி பரதநாட்டியத்தின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர்.

பொம்மலாட்டம் படத்தை போலவே ஆனந்த தாண்டவம் படத்திலும், "கனா காண்கிறேன்" என்ற பாடல் மூலம் இளைஞரை பலரையும் இழுத்து போட்டவர்.

தற்போது உலகம் முழுவதும் பல்வேறு அரங்குகளில் தன்னுடைய பரதநாட்டிய திறமையை வெளிப்படுத்தி பாராட்டுக்களை குவித்து வருகிறார்.

கடந்த வருடம் தலைசிறந்த நடனக்கலைஞர்கள் மட்டுமே பங்குபெறும் நெதர்லாந்தின் 'கார்சோ டான்ஸ் தியேட்டர்' அரங்கில் தன்னுடைய நடன நிகழ்ச்சியினையும் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவருடைய ஆட்டத்தில் மயங்கிய அதிகாரிகள் இந்த வருடமும் அவருக்கு அழைப்பிதழ் விடுத்துள்ளனர்.

அதோடு அல்லாமல் அவரை கௌரவிக்கும் விதமாக நெதர்லாந்து நாட்டின் குடியுரிமையையும் வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்