பிரபல திரைப்பட நடிகைக்கு திருமணம் நடந்த பங்களாவிற்குள் புகுந்த கொள்ளையன்! எதையெல்லாம் திருடியுள்ளான் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான சோனம் கபூருக்கு திருமணம் நடைபெற்ற பங்களாவிற்குள் புகுந்த திருடன் லட்சக்கணக்கான பணம் மற்றும் நகைகளை திருடி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். இவர் கடந்த மார்ச் மாதம் 8-ஆம் திகதி காதலர் ஆனந்த் அகுஜாவை கரம் பிடித்தார்.

இந்த திருமணம் சோனம் கபூரின் உறவினருக்கு சொந்தமான மும்பை பந்த்ராவில் உள்ள பங்களாவில் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 20-ஆம் திகதி இந்த பங்களாவிற்குள் நள்ளிரவு புகுந்த திருடன் அங்கிருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளான்.

நான்காவது மாடியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை பொருட்கள் மற்றும் பணம் செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் காவலாளி தூங்கிக் கொண்டிருந்ததால், திருடனை பிடிக்க முடியவில்லை எனவும், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடன் திருடிச் சென்ற காட்சிகள் அனைத்து சிசிடிவி கமெராவில் பதிவாகியிருப்பதால், பொலிசார் அதன் அடிப்படையில் திருடனை தேடி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் சோனம் கபூரின் வைர நெக்லஸ் திருடு போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers