பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவிடம் போனில் பேசிய கோபி இவ்வளவு மோசமானவரா? அதிர்ச்சி தரும் தகவல்கள்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல தனியார் தொலைக்காட்சியி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் 2 என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இன்றோடு முடிவுக்கு வருகிறது.

இந்த சீசனின் வெற்றியாளர் ரித்விகா தான் என்று செய்திகள் வெளியாகிவிட்டன, ஆனால் அதைப் பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, நடிகை ஐஸ்வர்யா கோபி என்பரிடம் நான் பேச வேண்டும் என்று விருப்பப்பட்டார்.

அங்கிருந்த போட்டியாளர்கள் அனைவரும் அம்மா மற்றும் அப்பாவிடம் பேச ஆசைப்பட்டனர். ஆனால் ஐஸ்வர்யா அம்மாவை விட கோபியிடம் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறாரே, அப்படி அந்த கோபி யார் என்று பலரும் யோசிக்கும் வேலையில், அவரைப் பற்றி சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், ஐஸ்வர்யா தொடர்புகொண்டு பேசிய கோபி, கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை பொலிசால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தவர்.

நிதி நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாக பலரிடம் பல கோடி ரூபாயைச் சுருட்டியதால் கைது செய்யப்பட்டார்.

அப்போது சென்னை நகரக் காவல் துறை ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன், இவர் மீதான வழக்குகளை பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டிருந்த நிலையில், சில மாதங்களிலேயே சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

வழக்கு இப்போது பொருளாதாரக் குற்றப் பிரிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இரு கோபி கிருஷ்ணன் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார். அப்போ தான் ஐஸ்வர்யா அறிமுகமாகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததிலும் கோபிக்குப் பங்கு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை இந்த நிகழ்ச்சிக்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் புகழை வைத்து, வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் பார்க்கத் திட்டமிட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.

அதேபோல, இந்த சீஸன்ல அடம்பிடிச்சு ஷோவுக்குள் போன ஒரே ஆள், ஐஸ்வர்யாதான். முதல் சீஸன் முடிஞ்சதுல இருந்தே 2-வது சீஸன்ல கலந்துக்கணும்னு பல வழிகளில் ஐஸ்வர்யா முயற்சி செய்திருக்கிறார்.

தமிழ் சரியா பேசத் தெரியல, இன்னும் கொஞ்சம் பிரபலமான பிறகு சேர்த்துக்கிறோம் என பல காரணங்களைச் சொல்லி சேனல் நிர்வாகம் இவரை முதலில் ஏற்கவில்லை. ஆனா, ஏதோ ஒரு வழியில இந்த நிகழ்ச்சிக்குள்ள ஐஸ்வர்யா வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் கோபி என்பவரின் முழுப்பெயர் வி.வி.கோபி கிருஷ்ணன் (வாசு வெங்கடகிருஷ்ணன் கோபிகிருஷ்ணன்). இவர் ஜெய்சாய் ராம் ஹோம்ஸ் இந்தியா, தீயாஸ் ஹோட்டல்ஸ், ஓம் ராகவா சிட்ஸ் உள்ளிட்ட சில கம்பெனிகளின் இயக்குநர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...