பிரபல நடிகர் அஜித் அணியின் சாதனை! வெளிநாட்டில் முதல் இடத்தை தடுத்த இனவெறி?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான அஜித் அணி அவுஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்ட போதும், இனவெறி காரணமாக அவர்களுக்கு முதல் இடம் கொடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் (விண்வெளி ஆராய்ச்சி) பிரிவில் ஆளில்லாத சிறிய ரக விமானங்களை வடிவமைக்கும் மாணவர் குழுவுக்கு ஆலோசகராக பிரபல திரைப்பட நடிகர் அஜித்குமார் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார்.

அவர் வழிநடத்தும் மாணவர் குழுவுக்கு dhaksha என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவுஸ்திரேலியாவில் நடந்த UAV மெடிக்கல் எக்ஸ்பிரஸ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று அஜித் அணி சாதனை படைத்தது.

மருத்துவ பயன்பாட்டுக்கான ஆளில்லா சிறிய ரக விமானங்களை வடிவமைப்பதற்கான போட்டியில்தான் நடிகர் அஜித்தின் டீம் கலந்துகொண்டது.

அவசர காலங்களில், மனிதர்கள் எளிதில் நுழைய முடியா இடங்களில் அல்லது தூரத்தில் இருக்கும் காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் இந்த விமானங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

செயல்முறை பிரிவில் ஆளில்லா விமானத்தின் பறக்கும் திறன், மாணவர்களின் தொழில்நுட்ப திறன் சோதிக்கப்படுகிறது. அந்தப் பிரிவில் உலகின் அனைத்து அணிகளையும் விட சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்தது இந்த அணி.

ஆனால், நேர்முகத் தேர்விலும் நடுவர் குழுவின் ஆய்விலும் அவுஸ்திரேலியா அணியான Monash UASஅணிக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்து முதலிடம் பெற வைத்துள்ளனர்.

அஜித் அணி சிறப்பாக செயல்பட்டும் இத்தகைய முடிவை அறிவித்ததற்கு நடுவர்களின் இனவெறியே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பில் இருப்பதால் அவுஸ்திரேலியா செல்ல முடியவில்லை. இருப்பினும் அவர்தொலைபேசி மூலம் வழிகாட்டுதல்களை வழங்கி அணி வெற்றிக்கு உதவியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...