எடையை குறைக்க ஆஸ்திரியா சென்ற பாகுபலி நடிகை

Report Print Kavitha in பொழுதுபோக்கு

பாகுபலி படத்தில் தன் நடிப்பு திறமையால் ஒட்டுமொத்த ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைக்க ஆஸ்திரியா சென்றுள்ளார்.

இந்நிலையில் அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்துக்காக குண்டாக வேண்டி நிலையிருந்தது படத்தின் கதையே குண்டாக இருக்கும் பெண் அடையும் சிரமங்கள் பற்றியது என்பதால் அதை சவாலாக எடுத்துக்கொண்டு உடல் எடையை ஏற்றினார்.

தற்போது ஏற்றிய எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார்.

தற்போது இவர் ஆஸ்திரியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்பா கிளினிக் ஒன்றிற்கு உடல் எடையினை குறைக்க சென்றுள்ளார்.

இவர் சில வாரங்கள் அங்கு தங்கி உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சை, இளமை தோற்றத்திற்கான சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ள உள்ளார்.

அனுஷ்கா கைவசம் புதிய படங்கள் எதுவுமில்லாத காரணத்தால் அவருடைய குண்டான உடலமைப்பைக் காரணம் காட்டி அவரை நடிக்கவைக்க பலர் தயங்குகிறார்கள் என்று தகவல் வெளியானது.

மேலும் தெலுங்கு திரையுலகத்தின் பிரபலங்கள் பலர் அங்கு சென்று சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் ஆலோசனையின் பேரில்தான் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers