பாலியல் வன்கொடுமை புகார்: பிரபல நடிகையின் சிகை அலங்கார நிபுணர் கைது

Report Print Kabilan in பொழுதுபோக்கு

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பிரபல நடிகை கங்கனா ரணவத்தின் சிகை அலங்கார நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்திடம் சிகை அலங்கார நிபுணராக இருப்பவர் பிராடன் அலஸ்டர் டிக்கி. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவர், சிறுவன் ஒருவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவனது தாய் பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் கொலபாவில் இருந்த டிக்கி, போக்சா சட்டத்தின் கீழ் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இதுகுறித்து பொலிசார் தரப்பில் கூறுகையில், ‘சிறுவனிடம் தகாத உறவு கொண்டதாக வந்த புகாரின் பேரில் இவரை கைது செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட சிறுவனின் வீட்டிலிருந்து ஒருநாள் டிக்கி வெளியேறும் போது, சிறுவனின் தாய் பார்த்து யார் என்று விசாரித்துள்ளார்.

சிறுவனின் நண்பர் என்று கூறிக்கொண்டு டிக்கி வெளியேறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் தாய், தொடர்ந்து கண்காணித்த பின் சிறுவனை டிக்கி பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் டிக்கி கைது செய்யப்பட்டார்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...