நிச்சயதார்த்தம் செய்துவிட்டு திருமணத்தை நிறுத்தியது ஏன்? பிரபல நடிகை விளக்கம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகை ராஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தியது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கன்னட நடிகை ராஷ்மிகாவுக்கும், கன்னட நடிகர் ரக்‌ஷித்துக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ராஷ்மிகா திருமணத்தை நிறுத்தியதாக தகவல் பரவியது.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் ராஷ்மிகா நெருக்கமாக நடித்தது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

எனவே, ராஷ்மிகா மற்றும் ரக்‌ஷித்துக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்று போனதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக ராஷ்மிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘இது என் மீதான விமர்சனத்திற்கு பதில் ஏதும் கூறாமல் இருந்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் பல்வேறு கதைகள், கருத்துகள், விமர்சனங்கள் வெளியாகி இருக்கின்றன.

என்னைப் பற்றி சித்தரிக்கப்பட்ட விடயங்கள் என்னை அதிகமாக காயப்படுத்தின. இதற்காக உங்களை குற்றம் கூறவில்லை. நானும் சரி, ரக்‌ஷித்தும் சரி. இல்லையென்றால் இந்த துறையில் யாராக இருந்தாலும் இது போன்ற கதைகளை தவிர்த்துவிட்டு போய்விட முடியாது.

இருந்தாலும் நாணயத்தை போல எல்லா கதைகளுக்கும் இரண்டு பக்கம் உண்டு என்பதை கூற விரும்புகிறேன். கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்