நள்ளிரவில் தேவைப்பட்டால் கூப்பிடுங்க வருகிறேன்: பிரபல நடிகையை அதிர வைத்த நடிகர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நள்ளிரவில் தேவைப்பட்டால் கூப்பிடுங்கள் நான் வருகிறேன் என நடிகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

கபாலி, அழகுராஜா போன்ற தமிழ்த்திரைப்படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எனது முதுகில் அடிபட்டதால் ஹொட்டலுக்கு கிளம்பினேன்.

நான் சென்ற அதே லிஃப்ட்டில் என்னுடன் பணியாற்றிய நடிகரும் வந்தார். அவரும் அந்த படத்தில் பணியாற்றுகிறார் என்றாலும் நாங்கள் அவ்வளவாக பேசியது இல்லை.

எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டது அந்த நடிகருக்கு தெரியும். இந்நிலையில் நள்ளிரவில் உதவி தேவைப்பட்டால் என்னை கூப்பிடுங்கள். நான் வந்து முதுகை தடவி விடுகிறேன் என்றார். அந்த நடிகர் கூறியதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது குறித்து எனது இயக்குனரிடம் கூற அவர்கள் அந்த நடிகரை அழைத்து பேசினார்கள்.

அதன் பிறகு அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers