நடிகை சிம்ரனின் தங்கை மோனல் தற்கொலை விவகாரத்தில் சாட்சியத்தை அளித்த மும்தாஜ்: சில பக்கங்கள்!

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மும்தாஜ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்டு இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இவரை பற்றி அறியாத சில பக்கங்கள் இதோ

1980 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவரது உண்மையான பெயர் நக்மா கான். மொடலிங் செய்து வந்த இவர், டி.ராஜேந்தர் இயக்கத்தில் மோனிஷா என் மோனாலிஷா என்ற படத்தில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தனது பெயரை மும்தாஜ் என மாற்றிக்கொண்டார். குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பிரபலமானார்.

2007 ஆம் ஆண்டு தனது குருநாதர் என கூறிக்கொள்ளும் டி.ராஜேந்தரின் வீராச்சாமி படத்தில் நடித்தார். அதன்பிறகு உடல் எடை அதிகரித்த காரணத்தால் அதிகமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இவர், 2004 ஆம் ஆண்டு நடிகை சிம்ரனின் தங்கை மோனல் தற்கொலை விவகாரத்தில் சிக்கினார். டான்ஸ் மாஸ்டர் கலாவின் தம்பி பிரசன்னாவை மோனல் காதலித்து வந்தார்.

ஆனால் அதை கலாவின் குடும்பத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் மோனலை தொலைபேசியில் அழைத்து மிரட்டி வந்தனர். மேலும் பிரசன்னாவும் மனமுடைந்து காதலில் இருந்து பின்வாங்கினார். இதனால் மனம் நொந்து மோனல் தற்கொலை செய்து கொண்டார் என்று சிம்ரன் தெரிவித்தார்.

இதில், டான்ஸ் மாஸ்டர் கலாவின் வேண்டுகோளின் பேரில்தான், மோனல் வீட்டிலிருந்த சில முக்கிய சாட்சியங்களை மும்தாஜ் கலைத்துள்ளார் என்று சிம்ரன் குற்றம்சாட்டியதன் பேரில், மும்தாஜிடம் பொலிசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்ச்சைகளுக்கு பிறகு, 2009 ஆம் ஆண்டு ராஜாதி ராஜா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் இப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

இதனைத்தொடர்ந்து திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிலையில், கடந்த வாரம் இவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers