ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பிரபல தமிழ் நடிகை: 4000 ரூபாய்க்கு கஷ்டப்படும் சோகம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
289Shares
289Shares
lankasrimarket.com

தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள நடிகை பிந்துகோஷ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கோழிக்கூவுது, தூங்காதே தம்பி தூங்காதே, ஓசை போன்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள பிந்துகோஷ், செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தவர், தைராய்டு பிரச்சனை மற்றும் குடும்பப் பொருளாதார சிக்கல்களால் வறுமை நிலைக்குச் சென்றார்.

தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவச் செலவுக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு.

இது குறித்து அறிந்த நடிகர் விஷால் தனிப்பட்ட முறையில் மாதந்தோறும் 2,500 ரூபாயும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் 1,500 ரூபாயும் கொடுக்கிறார்.

மருத்துவருக்கு, மாத்திரைக்கு, போக்குவரத்துக்குனு மாதந்தோறும் 6,000 ரூபாய் வரை செலவாகுது.

இப்போ, கிடைக்கும் 4,000 ரூபாயால் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கேன்.

தனிமையில் வாழும் என்னை நடிகை கோவை சரளா நேரில் சந்திச்சு ஆறுதல் சொன்னாங்க. சினிமா நண்பர்களாவது அப்பப்போ சந்திச்சு ஆறுதலா பேசினால் மகிழ்ச்சியடைவேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்